பெட்டிக்குள் முடங்கி பூசணம் பிடித்திருக்கும். அதனை தூசு தட்டி வெளியிட பரந்த மனசு வேண்டும். சினிமா உலகில் அப்படியொரு மனிதரை பார்ப்பது அரிது.
நாம் சொல்ல வருவது விவேக் கதாநாயகனாக நடித்த, சொல்லி அடிப்பேன் படத்தைப் பற்றி.
இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த் துணிச்சலாகத்தான் இந்தப் படத்தை தயாரித்தார். கெட்ட நேரம்... மன்மதன் படம் ஏகப்பட்ட செலவுகளை இழுத்து வைக்க, சொல்லி அடிப்பேன் முடிந்தும் படத்தை வெளியிட முடியாத நிலை.
புலி வருது கதையாக படம் இதோ வருது அதோ வருது என சில காலம் சொல்லிக் கொண்டிருந்தார் விவேக். இப்போது அவரும் படம் குறித்துப் பேசுவதில்லை.
வெள்ளித்திரை காணாமல் கரையானுக்கு இரையாகிவிடுமோ என்ற நிலையில், கிருஷ்ணகாந்தை கைதூக்கிவிட முன்வந்வந்துள்ளார் இன்சைட் மீடியா நாக்ரவி. சொல்லி அடிப்பேன் படத்தை இவர் வாங்கவுள்ளதாகவும், படம் விரைவில் வெளிவரும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த செய்தியால் விவேக்கை விட சாயா சிங்கும், தேஜாஸ்ரீயும் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர். இருவரும் ஹீரோயின்களாக நடித்த படமல்லவா!