அந்நிய மண்ணில் தமிழ்ப் படங்கள்!

திங்கள், 28 ஜூலை 2008 (17:44 IST)
வெளிநாட்டு உரிமை என்பது முன்பு கொசுறு. இன்றோ அது ரொம்பப் பெரிசு. ஒரு படத்தின் வெளிநாட்டு உரிமை கோடிகளில் விலை போகிறது.

மணிரத்னம், கமல், ரஜினி மற்றும் ஷங்கர் படங்களுக்கு மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட அயல்நாடுகளில் வரவேற்பு இருந்தது.

இந்த வட்டம் விஜய், அஜித், விக்ரம் என விரிந்து தனுஷ், பரத் வரை பரந்துள்ளது. பரத்தின் முனியாண்டி விலங்கியல் UK-யில் வெளியாகி பல லட்சங்கள் வசூலித்தது சமீபத்திய உதாரணம்.

UK-யில் குருவி ஒரு கோடியும், தசாவதாரம் இரண்டரை கோடியும் வசூலித்தன. அமெரிக்காவில் இப்படங்களின் வசூல் இதைவிட அதிகம். குசேலன் படத்துக்கு கட்-அவுட் வைத்து அமெரிக்க வாழ் தமிழர்கள் இப்போதே தயாராகிவிட்டனர்.

படப்பிடிப்பு முடியாத நிலையில் சுசி. கணேசனின் கந்தசாமி படத்தின் அமெரிக்க உரிமை மட்டும் ஒரு கோடிக்கு விலை போயுள்ளது. சரோஜா, சத்யம், வாரணம்ஆயிரம் படங்களின் உரிமையை வாங்கவும், வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடையே போட்டி நிலவுகிறது.

தமிழ் சினிமாவுக்கு மகிழ்ச்சியான செய்தி இது.

வெப்துனியாவைப் படிக்கவும்