ரீ-மேக் படத்தில் பரத்!

திங்கள், 28 ஜூலை 2008 (17:43 IST)
மயிலு, பூ, அவள் பெயர் தமிழரசி படங்களைத் தயாரித்துவரும் மோசர் பேர் நிறுவனம் இந்திப் படமொன்றின் ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளது.

ஷாகித் கபூர், கரீனா கபூர் நடிப்பில் வெளியான 'ஜப் வி மெட்' வட இந்தியாவில் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனை தென்னிந்திய மொழிகளில் ரீ-மேக் செய்யும் உரிமையை மோசர் பேர் மொத்தமாக வாங்கியது. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த ரீ-மேக்கில் யார் நடிப்பது?

மோசர் பேரின் முதல் சாய்ஸ் மாதவன். அவர் மறுக்க தனுஷை அணுகினர். தனு¤க்கு ஜோடி த்ரிஷா. சொல்லி வைத்ததுபோல் இந்த இருவரும் கால்ஷீட் பிஸி என கைவிரிக்க, இப்போது படத்தில் நடிக்க பரத் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஹரியின் சேவலில் நடிக்கும் பரத் அடுத்து சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம், பேரரசுவின் திருத்தணி படங்களில் நடிக்கிறார். இவை முடிந்ததும் 'ஜப் வி மெட்' ரீ-மேக்கில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.

படத்தின் இயக்குனர், நாயகி இன்னும் முடிவாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்