மணிரத்னம், அனில் அம்பானி பேரம்!
சனி, 26 ஜூலை 2008 (17:26 IST)
மணிரத்னம் விரைவில் துவங்கவிருக்கும் படத்தின் விற்பனை உரிமை ரூ.120 கோடிக்குப் பேரம் பேசப்பட்டு வருகிறதாம். பேரம் படிந்தால் தென்னிந்திய மொழி சினிமாவில் அது சாதனையாக இருக்கும்.
மணிரத்னம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தனது படத்தை உருவாக்குகிறார். இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு பதிப்பில் அபிஷேக்கிற்குப் பதில் விக்ரம். மூன்று மொழிகளிலும் ஐஸ்வர்யா ராயே நாயகி.
தமிழ் பதிப்பில் நடிக்க ப்ரியா மணி, பிருத்விராஜ் ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளனர். கேமரா பி.சி.ஸ்ரீராம், இசை ஏ.ஆர். ரஹ்மான்.
இந்தப் படத்தின் மூன்று மொழி உரிமையையும் ரூ.120 கோடிக்கு வாங்க அனில் அம்பானியின் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (பிக் பிக்சர்ஸ்) முயன்று வருகிறதாம். உறுதி செய்யப்படாத இந்தத் தகவல் உண்மையானால், அது இந்தியச் சினிமா விற்பனையில் ஒரு மைல் கல்லாக அமையும்.