ஐங்கரன் தயாரிப்பில் சசிகுமார்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (20:05 IST)
பாராட்டுக்களை கேட்டு பஞ்சடைத்து போயிருக்கும் சசிகுமாரின் காதுகள், போகிற இடமெல்லாம் சுப்ரமணியபுரத்தை வானம் அளவுக்கு வியந்து பேசுகிறார்கள்.

இந்த பாராட்டுக்களில் விழுந்து விடுகிறவராக தெரியவில்லை சசிகுமார். அடுத்த அடியை ஆறு மாதத்திற்குப் பிறகே வைப்பது என புத்திசாலித்தனமான முடிவெடுத்துள்ளார். அதுவரை? சமுத்திரக்கனியின் புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம்.

சசிகுமார் இயக்கும் அடுத்த படத்தை ஐங்கரன் இண்டர்நேனல்ஸ் தயாரிக்கிறது. திறமையான இயக்குனர்களை யார் பயன்படுத்துவது என்பதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே நிழல் யுத்தமே நடக்கிறது.

சசிகுமார் விஷயத்தில் யுத்தம் வென்று சத்தமில்லாமல் ஐங்கரன் நிறுவனம் அட்வான்ஸும் கொடுத்துள்ளதாம்.

அப்புறமென்ன... அடித்து கிளப்ப வேண்டியதுதானே!

வெப்துனியாவைப் படிக்கவும்