ரஜினி ஜோடி விஜயலட்சுமி!

வெள்ளி, 25 ஜூலை 2008 (20:01 IST)
ஹைதராபாத்தில் சுல்தான் தி வாரியர் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பில் ரஜினியுடன் கலந்து கொண்டவர் விஜயலட்சுமி! அஞ்சாதேயில் விழிகளால் பேசிய அதே அகத்தியனின் மகள் விஜயலட்சுமி.

செளந்தர்யா இயக்கும் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரில் ரஜினி ஜோடியாக இலியானா நடிப்பதாக கூறப்பட்டது. செளந்தர்யாவும் இலியானாவை சந்தித்து பேசினார். சம்பளமாக பெருந்தொகை கேட்ட இலியானா பிறகு சம்மதித்ததாகக் கூறப்பட்டது.

என்ன நடந்ததோ... இலியானாவை நீக்கிவிட்டு விஜயலட்சுமியை ஒப்பந்தம் செய்துள்ளார் செளந்தர்யா. ரஜினி - விஜயலட்சுமி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு பிறகு அவை அனிமேஷனில் மாற்றப்படும்.

செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ அட்லாப்சுடன் இணைந்து படத்தை தயாரித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்