சரத்குமாரை காக்க வைத்த நமிதா!

வெள்ளி, 25 ஜூலை 2008 (15:57 IST)
சரத்குமாரின் சொந்த தயாரிப்பான 1977 படத்தின் பாடல் காட்சி ஒன்றை ஏவி.எம். ஸ்டுடியோவில் எடுத்தார்கள். மேக்கப்புடன் காலையிலேயே சரத்குமார் ஆஜர்.

உடன் ஆடவேண்டிய கவர்ச்சி சுனாமி நமிதா ஆப்சென்ட். பல மணி நேர காத்திருப்புக்குப் பின் மெதுவாக வந்திருக்கிறது நமிதாவின் நாட் பீலிங் வெல் மெசேஜ்.

மறுநாளும் சரத்குமார் காத்திருக்க, கடைசி வரை காட்சி தரவில்லையாம் கவர்ச்சி சுனாமி. ஆள் எங்கே என்று விசாரித்துப் பார்த்ததில் சினிமா விருது நிகழ்ச்சி ஒன்றிற்காக வியர்க்க விறுவிறுக்க ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் நமிதா.

நிகழ்ச்சி நடத்துகிறவர்களிடம் லம்பாக வாங்கியதால் படப்பிடிப்பை அம்போவென விட்டது பிறகு தெரிய வந்திருக்கிறது.

படத்தின் கமர்ஷியல் ஏரியாவுக்கு நமிதா தேவைப்படுவதால் தீர்ப்பு சொல்ல முடியாத அவஸ்தையில் இருக்கிறார் நாட்டாமை.

வெப்துனியாவைப் படிக்கவும்