மாளவிகாவுக்கு பதில் நிஷா கோத்தாரி!

வியாழன், 24 ஜூலை 2008 (20:10 IST)
தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகக் கூறி கார்த்தீகையில் நடிக்காமல் எஸ்கேப்பானாரே மாளவிகா, அவரது வேடத்தில் நிஷா போத்தாரி நடிக்கிறார்.

ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறேன். கார்த்தீகையில் நடிப்பதென்றால் அடுத்த வருஷம்தான் கால்ஷீட் என கறாராக கூறிவிட்டார் மாளவிகா. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசியும் பிடிவாத்திலிருந்து இறங்கி வரவில்லை.

வழக்கு போடுவோம் எ‌ன்ற பயமுறுத்தலுக்கும் அசைந்து கொடுக்கவில்லை. வழக்குதானே... தாராளமாக போடுங்கள் என்று விட்டேத்தியாக மாளவிகா கூற, உண்மையிலேயே விக்கித்துப் போனார் தயாரிப்பாளர்.

வேதாளம் இப்போதைக்கு இறங்கி வராது என்பது புரிந்ததால் அவருக்கு பதில் நிஷா கோத்தாரியை ஒப்பந்தம் செய்துள்ளனர். பெயரைப் பார்த்து கலவரம் வேண்டாம். ஜேஜே-யில் அறிமுகமான அமோகாவின் இந்திப் படவுலகப் பெயர்தான் நிஷா கோத்தாரி.

வெப்துனியாவைப் படிக்கவும்