நாவலும் சினிமாவும்!

புதன், 23 ஜூலை 2008 (20:27 IST)
சினிமாவில் தற்போது ஒரு நல்ல விஷயம் நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது... பல நாவல் ஆசியர்களின் கதைகளை திரைப்படங்களாக எடுக்க முன்வந்திருப்பதுதான்.

பல எழுத்தாளர்களின் கதைகள் சில வருடங்களுக்கு முன்னால் திரைப்படமாக எடுக்கப்பட்டு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் அந்த ஐடியாவை கிடப்பில் போட்டுவிட்ட திரையுலகினர் மீண்டும் அந்த ஃபார்முலாவை கையிலெடுத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் 'இரவில் ஒரு வானவில்' அகராதியாக திருமலை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல எழுத்தாளர் சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' ஆனந்த தாண்டவமாகிறது. அதேபோல் 'வெயிலோடு போயி' சிறுகதை பூ வாகவும், நீல, பத்மநாபனின் 'தலைமுறைகள்' படம் அதே பெயரில் படமாகிக் கொண்டிருக்கிறது.

இதுபோல் இன்னும் பல வைரங்கள் நமக்கு கிடைக்கும் தோண்டுங்கள் இயக்குனர்களே.

வெப்துனியாவைப் படிக்கவும்