ரிஷி நடிக்கும் தமிழகம்!

செவ்வாய், 22 ஜூலை 2008 (20:46 IST)
ரிஷி (ரிச்சர்ட்) நடிக்கும் புதிய படம் தமிழகம். நாளை படத்திற்குப் பிறகு தெலுங்கில் கவனம் செலுத்திய ரிச்சர்ட் தனது பெயரை ரிஷி என மாற்றி கிருஷ்ணாவின் ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படத்துக்கு தமிழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்குகிறார். ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் முதன் முறையாக தமிழகத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார்.

ரிஷிக்கு ஜோடி அர்ச்சனா. காமெடி ஏரியாவை கவனிப்பவர் கருணாஸ். ஆசி·ப் அலி படத்துக்கு இசையமைக்கிறார். காதலுடன் சேர்ந்த ஆக்சன் படம் இது என்றால் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.

வெப்துனியாவைப் படிக்கவும்