BPO எனப்படும் கால் சென்டர்களை மையப்படுத்தி புதிய படம் எடுக்க இளம் இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கால் சென்டர்களின் கலாச்சார மீறல்களே இவர்களின் டார்கெட்.
ஸ்ரேயா நடிக்கும் தி அதர் சைட் ஆஃப் தி லைன், த்ரிஷா நடிக்கம் சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகியவை கால் சென்டர்களின் கலாச்சார பின்னணியை அலசுகின்றன.
இதே அலைவரிசையில் வம்சி கிருஷ்ணா, ப்ரியாங்கா நடிப்பில் தயாராகும் படம் சென்னை பட்டணம். கால் சென்டர் காதலே இதன் பிரதான கதை.
தமிழ் சினிமா கத்தி, அரிவாள், ரத்த நிறைந்த ஹார்டுவேர் பாதையிலிருந்து காதல், கலாச்சார மீறல் மிகுந்த சாஃப்ட்வேர் பாதைக்கு திரும்பியிருக்கிறது. இது நன்மையா, தீமையா என்பதை நான்கு படங்கள் வந்த பின்தான் கூறமுடியும்.