இம்மாதம் 31 ஆம் தேதி குசேலன் ரிலீஸ். ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் இப்படத்தை சுமார் 60 கோடிக்கு வாங்கியிருக்கிறது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.
உலகம் முழுவதும் 1,200 பிரிண்டுகள் போடுவதாக இருந்தனர். ரஜினியின் அறிவுரைப்படி பிரிண்டுகளின் எண்ணிக்கையை 500 ஆக குறைத்துள்ளனர்.
குறைவான திரையரங்குகளில் வெளியிட்டால் படம் அதிக நாள் ஓடும் என்பது ரஜினியின் கணக்கு. 100 நாட்கள் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடவேண்டும் என்ற விருப்பமும் ரஜினிக்கு உண்டாம். அதற்காகவே இந்த குறைப்பு என்கிறார்கள், விஷயமறிந்தவர்கள.