விஜயின் கெஸ்ட் ரோல்!

செவ்வாய், 22 ஜூலை 2008 (20:11 IST)
கதையில் காட்டும் அக்கறையைவிட, கமர்ஷியலில் எஸ்.ஏ. சந்திரசேகரன் காட்டும் அக்கறை பலமடங்கு. நிதின் சத்யா, சிந்து துலானி நடிக்கும் இவரின் பந்தயத்தில், விஜயை எப்படியும் இழுத்துவி எஸ்.ஏ.சி.க்கு ஆசை.

இதற்காக நிதின் சத்யாவை விஜய் ரசிகராக படம் நெடுக உலக விட்டிருப்பவர், விஜய் போஸ்டர், விஜய் கிள்பிங்ஸ் என படத்தில் அங்கங்கே விஜய் பில்டப்பை சேர்த்திருக்கிறார்.

இயக்குனர் பேரரசு விஜயை இயக்குவதாகவும், நிதின் சத்யா அதை பார்த்து பரவசப்படுவதாகவும் பந்தயத்தில் ஒரு காட்சியை திணித்துள்ளார் எஸ்.ஏ.சி.

இந்த பில்டப்பும் திணிப்பும் எல்லாம் பந்தயத்துக்கு ஸ்டார் வேல்யூ கிடைப்பதற்கும், விஜய் ரசிகர்களை இழுப்பதற்குமேயாகும். கதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. பேரரசு விஜயை வைத்து எடுக்கும் படத்திற்கு ஒரு பெயரும் கொடுத்திருக்கிறார் எஸ்..ஏ.சி. படத்தின் பெயர் எம்.ஜி.ஆர்.!

அட, ராமா!

வெப்துனியாவைப் படிக்கவும்