காணாமல் போன கந்தசாமி ஃபிலிம்!

திங்கள், 21 ஜூலை 2008 (20:38 IST)
கந்தசாமி யூனிட்டை நொந்தசாமி ஆக்கியிருக்கிறது ஃபிலிம் காணாமல் போன சமாச்சாரம்.

தாணு தயாரிப்பில் உலக நாடுகளில் வளைத்து கந்தசாமி படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சுசி. கணேசன். மெக்சிக்கோவில் படப்பிடிப்பு முடித்து ஃபிலிம் பாக்சோடு சென்னை கிளம்பியிருக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் சில ஃபிலிம் பாக்சுகளில் சேதாரம். திரும்பி மெக்சிகோ செல்ல அது என்ன அண்டை மாநிலமா?

பின்னி மில்லில் மெக்சிகோ போல செட் அமைத்து சேதாரமான காட்சிகளை எடுக்கிறார்கள். தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தாணு முகம் சுளிக்காமல் பணத்தை அள்ளி இறைப்பதால், உற்சாகத்துடன் 'பேட்ச் வொர்க்' வேலைகளை கவனிக்கிறது கந்தசாமி யூனிட்.

வெப்துனியாவைப் படிக்கவும்