ஜூலை 30 ராமன் தேடிய சீதை ஆடியோ!

சனி, 19 ஜூலை 2008 (21:02 IST)
கார்த்திகா, விமலாராமன், ரம்யா நம்பீஸன், கஜாலா என நான்கு ஹீரோயின்கள். கூடுதலாக கெஸ்ட் ரோலில் நவ்யா நாயர். சேரன், பசுபதி, நித்தின் சத்யா என மூன்று ஹீரோக்கள். ராமன் தேடிய சீதையின் நடிகர் பட்டாளமே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

கோடம்பாக்கம் படத்தின் இயக்குனர் ஜென்ஜியின் இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் வித்யாசாகர். கதையை தாண்டிச் செல்லாத பாடல்கள் படத்தின் பலம்.

படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் இம்மாதம் 30 ஆம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார்கள்.

விமலா ராமனின் அருவிக் குளியலும், கண் தெரியாத பசுபதி கதாபாத்திரமும் ராமன் தேடிய சீதையின் ஹைலைட்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்