சிறு பத்திரிக்கைகளில் தசாவதாரத்தை பிரித்து மேற்கிறார்கள். ·பேஷன் ஷோ, மாறுவேஷப் போட்டி, லொள்ளு சபா என சகட்டுமேனிக்கு கிண்டல்கள். தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது என்று இன்னொரு குற்றச்சாட்டு.
சிறு பத்திரிகைகளின் வாசகரான கமலை இந்த விமர்சனங்கள் சென்றடைந்துள்ளன. இந்த விமர்சனங்களை முன்வைத்து கோடம்பாக்கத்திலும் சில விமர்சனங்கள். இவற்றிற்கு கமலின் பதில் என்ன?
மக்களுக்கு பிடிக்க வேண்டும் என எடுத்தோம், அவர்களுக்கு பிடித்திருக்கிறது. படத்தில் சில தவறுகள் இருப்பதும் உண்மைதான் என்றிருக்கிறார்.
மர்மயோகிக்கு இப்படியொரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போதே உஷாராகிவிட்டார் கமல். மர்மயோகி அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
100 கோடி பட்ஜெட் என்றால் அனைத்து தரப்பையும் கவர்ந்துதானே ஆகவேண்டும், வேறு வழி?