ஈகோ சண்டை எப்போது வெடிக்கும் எப்படி முடியும் என்று பணம் போட்ட புரொடியூசர்கள் தலையில் துண்டு போட்டு கவலைப்படுகிறார்கள்.
இது கிருஷ்ணலீலை படப்பிடிப்பில் நடந்த மோதல். இயக்குனர் ஸெல்வன் ஒரு காட்சியை விளக்கியிருக்கிறார். நாயகன் ஜீவனுக்கு அதனை வேறு மாதிரி எடுக்க ஆசை.
ஸெல்வன் சொன்ன காட்சியில் ஜீவன் திருத்தம் சொல்ல, ஸெல்வனின் முகத்தில் கொல்லன் அடுப்பின் ஜுவாலை. நான் டைரக்டரா இல்லை நீ டைரக்டரா என அவர் எகிற, பதிலுக்கு ஜீவன் வார்த்தைகளைவிட, அன்றைய ஷ¥ட்டிங் கேன்சலாகியிருக்கிறது.
கிருஷ்ணலீலையை தயாரிப்பது ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களையே சொன்ன இடத்தில் நிற்க வைத்த இயக்குனர் சிகரம் பாலசந்தர்.
அடராமா என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் விஷயம் கேள்விப்பட்டவர்கள்.