மீண்டும் சிவசக்தி பாண்டியன்!

வெள்ளி, 18 ஜூலை 2008 (19:55 IST)
காதல் கோட்டை, காதலே நிம்மதி, கனவே கலையாதே படங்களைத் தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். இளம் இயக்குனர்களின் கலங்கரை விளக்காக சில காலம் இருந்துவிட்டு பிறகு காணாமல் போனார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு தேர்தலில் ஜெயித்த கையோடு மீண்டும் பழைய உற்சாகத்துடன் படம் தயாரிக்க திரும்பியிருக்கிறார் சிவசக்தி பாண்டியன்.

ஒரு கல்லூரியின் கதை பவன் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் ஒரு படம் தயாரிக்கிறார். சூரியன் பி.ஏ. பி.எல். என்பது படத்தின் பெயர். பி.ஏ. பி.எல். ஆங்கிலம் என்பதால் படத்தின் பெயர் மாறலாம்.

கனவே கலையாதே படத்திற்குப் பிறகு தொலைக்காட்சி தொடர் இயக்கிய வ. கெளதமன் மீண்டும் படம் இயக்குகிறார். சந்தனக்காடு தந்த பிரபலத்தில் இரண்டு படங்கள் கெளதமனுக்கு கிடைத்துள்ளன. அதிலொன்று சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் படம்.

மீண்டு(ம்) வந்திருக்கும் சிவசக்தி பாண்டியன் பழைய சக்தியை பெற்றால் சினிமாவுக்கு நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்