இந்த வருடம் வெற்றியை ருசித்த நான்கே நான்கு படங்களில் இரண்டு படங்கள் தெலுங்கு ரீ-மேக். வெற்றி பெற்ற படத்தை திரும்ப எடுப்பதில் ரிஸ்க் குறைவு. பருத்தி வீரன் கார்த்தியும் இந்தப் பாதையை தெரிந்து வைத்துள்ளார்.
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் நடித்து வருபவர் அடுத்து லிங்குசாமியின் படத்தில் நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து ஞானவேலின் ஸ்டுடியோ கிரீன் கார்த்தி நடிக்கும் படமொன்றை தயாரிக்கிறது.
படிக்காதவன் படத்தை இயக்கிவரும் சுராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற விக்கிரமாதித்துடு படத்தின் உரிமையை இதற்காக வாங்கி வைத்துள்ளார், ஞானவேல்.