ரேஸ் ரீ-மேக்கில் அஜித்!

சனி, 19 ஜூலை 2008 (17:09 IST)
ரேஸை அஜித் விட்டாலும் ரேஸ் அவரை விடவில்லை. இந்தியில் வெளியான ரேஸ் படத்தின் ரீ-மேக்கில் அஜித் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏகனில் நடித்துவரும் அஜித், அடுத்து கெளதம வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். வார்னர் பிரதர்ஸ் தயாரிக்கும் படம், வெங்கட்பிரபு இயக்கும் படம் என அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளன.

ஹாலிவுட் படங்களைத் தயாரித்து வரும் அசோக் அமிர்தராஜ் மீண்டும் தமிழ்ப் படம் தயாரிக்கும் எண்ணத்தில் உள்ளார். இந்தியில் வெற்றிபெற்ற ரேஸ் படத்தை ரீ-மேக் செய்ய முடிவு செய்துள்ளார் அசோக் அமிர்தராஜ். இதில் நடிக்க அவரது சாய்ஸ் அஜித்.

ரேஸில் அஜித்தை தவிர வேறு யார் பொருத்தமாக இருக்க முடியும். தல தலையசைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி.

வெப்துனியாவைப் படிக்கவும்