தடை தாண்டிய நாயகன்!

வியாழன், 17 ஜூலை 2008 (20:24 IST)
விஜயகுமார் ரெட்டி தயாரித்த படம் நாயகன். ஆகஸ்ட் மாதம் நாயகனை திரைக்கு கொண்டு வருவதாக திட்டம். இல்லை... கூடவே கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஃபைனான்சியர் ஒருவர். வழக்கம் போல் கடன் பிரச்சனை.

விசாரணை முடிந்து தீர்ப்பு வாசித்த நீதிபதி, நாயகனுக்கு தடையில்லை என்று கூற, இனிப்பு கொடுத்து கொண்டாடியது தயாரிப்பாளர் தரப்பு.

ஜே.கே. ரித்தீஷ் நடித்திருக்கும் நாயகன் ஹாலிவுட் படமான செல·போனின் அப்பட்டமான காப்பி. இதே படத்தை தழுவி எஸ்.வி. சேகர் தனது மகனை வைத்து வேகம் படத்தை எடுத்தார். வேகம் முந்திக்கொண்டதால் படம் தயாரான பிறகும் ரிலீஸை பல மாதங்களாக தாமதப்படுத்தி வருகிறார் நாயகன் தயாரிப்பாளர்.

கடன் விஷயத்தில் தப்பித்த நாயகனுக்கு 'காப்பி' விஷயத்து தண்டனை அளிக்கப் போவது யாரோ!

வெப்துனியாவைப் படிக்கவும்