குசேலன் பேருந்து!

வியாழன், 17 ஜூலை 2008 (20:19 IST)
கிராமங்களில் தியேட்டருக்கு ஆட்களை இழுக்க கட்டை வண்டியில் ஸ்பீக்கர் கட்டி பிட் நோட்டீஸ் விநியோகித்து அழைப்பார்கள். அதையே கொஞ்சம் ஹைடெக்காக செய்கிறது குசேலன் டீம்.

பேருந்து ஒன்றில் ரஜினி படங்களை ஒட்டி சென்னை மாநகரில் ஓடவிட தீர்மானித்துள்ளனர். போகிற வழியெங்கும் குசேலன் பாடல்களை பொழிந்து கொண்டே செல்லும் இப்பேருந்து. அதிர்ஷ்டம் உள்ளவர்கள் பேருந்தினுள் அழைக்கப்பட்டு ரஜினியின் ஸ்பெஷல் படங்களை பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அறுபது கோடிக்கு குசேலன் விற்பனையாகியுள்ளது. அதனை அறுவடை செய்யவே இந்த ஏற்பாடு.

அடுத்த வாரம் முதல் சென்னையை வலம் வரும் இந்த குசேலன் பேருந்தை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்