கோபி செட்டிப்பாளையத்தில் பொக்கிஷம்!

வியாழன், 17 ஜூலை 2008 (20:15 IST)
இத்தேஷ் ஜெபக் தயாரிக்கும் சேரனின் பொக்கிஷம் படத்தின் ூட்டிங் கோபி செட்டிப்பாளையத்தில் நடந்து வருகிறது.

மாயக்கண்ணாடிக்கு முன்பே சேரன் எடுப்பதாக இருந்த படம் இது. பத்மப்ரியா சேரனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சேரனுக்கு வெற்றி தேடித்தந்த ஆட்டோகிரஃப், தவமாய் தவமிருந்து போல ஃபிளாஷ்பேக்கை நினைவுகூரும் விதத்தில் பொக்கிஷம் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

கோபி செட்டிப்பாளையத்தில் சேரன் மற்றும் பத்மப்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படுகின்றன. மாயக்கண்ணாடியில் தொலைந்த பெயரை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பொக்கிஷம் படத்தை இயக்கி வருகிறார் சேரன்.

முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பில் குவிவது போல் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து பொக்கிஷம் படப்பிடிப்பை முக்கியமாக சேரனை காண மக்கள் குவிகிறார்கள்.

அதுசரி... சேரனும் இப்போது முன்னிணி ஹீரோதானே!

வெப்துனியாவைப் படிக்கவும்