கொட்டிக் கொடுத்தாலும் குத்தாட்டம் போடமாட்டேன் - நமீதா!

திங்கள், 14 ஜூலை 2008 (20:32 IST)
"இடைவேளைக்குப் பிறகு ஒரு குத்தாட்டம் கண்டிப்பாக வேணும் யாரைப் போடலாம்" இதுதான் தயாரிப்பாளர் தரப்பின் லேட்டஸ்ட் டிமாண்டாக உள்ளது. கோலிவுட்டோ, பாலிவுட்டோ எவ்வளவு தொகை கொடுத்தாவது ஒரு குலுக்கல் ஆட்டத்தை வைத்துவிடுகின்றனர்.

webdunia photoWD
நமீதாவுக்கு இதுபோன்ற நிறைய அழைப்புகள் வந்தும் நிராகரித்துவிட்டாராம். தனுஷுடன் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடுங்க, 22 லட்ச ரூபாய் சம்பளம் தருகினேறன் என்றெல்லாம் கூட ஒரு தயாரிப்பாளர் பேசிப் பார்த்தாராம். நமீதாவிடம் செல்லுபடியாகவில்லை.

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் குத்தாட்டம்கிற பேச்சுக்கே இடமில்லை என்று மறுத்துவிட்டாராம். நமீதா பாணியை பன்பற்றி தேஜாஸ்ரீயும் இந்த முடிவில்தான் இருந்தாராம்.

இருந்தாலும் என்ன செய்வார்? 'ஒற்றன்' படத்தில் தனக்கு 'சின்ன வீடா வரட்டுமா' பாட்டு மூலம் சான்ஸ் கொடுத்த இயக்குநர் இளங்கண்ணனே தனது அடுத்த படத்துக்கு அம்மணியை ஒரு பாடலுக்கு ஆட அழைத்துள்ளார். இப்போது இளங்கண்ணன் இயக்கப் போகும் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாம் போட தயாராகிவிட்டார்.