ஃபிலிம்ஃபேர் : பருத்தி வீரனுக்கு 6 விருதுகள்!

திங்கள், 14 ஜூலை 2008 (20:08 IST)
55வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்ரங்கில் நடந்தேறியது. இதில் தமிழில் சிறந்த படமாக 'பருத்திவீரன்' தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த இயக்குநர் - அமீர், சிறந்த நடிகர் - கார்த்தி, சிறந்த நடிகை - ப்ரியாமணி, சிறந்த குணச்சித்திர நடிகை - சுஜாதா, சிறந்த குணச்சித்திர நடிகர் - சரணவன் என 6 விருதுகளை பருத்திவீரன் தட்டிச் சென்றது.

ரஜினியின் 'சிவாஜி' படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை கே.வி. ஆனந்தும், சிறந்த இசையமைப்பாளர் விருதை ஏ.ஆர். ரஹ்மானும் பெற்றனர். 'உன்னாலே உன்னாலே' பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதை பா. விஜய் பெற்றார். 'அழகிய தமிழ் மகன்' நடன அமைப்புக்காக பிரேம் ர‌க்‌சித் சிறந்த நடன இயக்குனர் விருதைப் பெற்றார்.

'மொழி' படப் பாடலுக்காக எஸ்.பி.பி. சிறந்த பாடகராகவும், 'கிரீடம்' பாடலுக்காக சாதனா சர்கம் சிறந்த பாடகி விருதையும் பெற்றனர்¨. திரையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது நடிகர் சிவகுமாருக்கும், நடிகை ஜெயப்பிரதாவுக்கும் தந்து சிறப்பிக்கப்பட்டார்கள்.

சிறந்த தெலுங்குப் படமாக ஹேப்பி டேஸ், சிறந்த மலையாளப் படமாக 'கதபறயும் போள்', சிறந்த கன்னடப் படமாக 'ஆதின கலு' தேர்வு செய்யப்பட்டு விருதுகள் பெற்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்