ஹீரோவா? ஜீரோவா? பாக்யராஜ் தாக்கு!

திங்கள், 14 ஜூலை 2008 (20:05 IST)
"பிரபல இயக்குநர்களின் படங்களில்தான் நடிப்பேன். புதிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க மாட்டேன் என சில முன்னணி ஹீரோக்கள் பேட்டி அளிக்கிறார்கள். பிரபல டைரக்டர்கள் படத்தில்தான் நீங்கள் நடிப்பேன் என்று சொன்னால் ஹீரோவா அல்லது ஜீரோவா என்ற சந்தேகம்தான் வருகிறது.

உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லையா? உங்கள் துணிச்சல் எல்லாம் சினிமாவில்தானா? ஒரு ஹீரோவுக்கு 4 படம் ஓடவில்லை என்றால்கூட 5வது படத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். ஆனால் ஒரு புது டைரக்டருக்கு தன் முதல்படம் ஓடவில்லையென்றால் அத்தோடு நிலைக்க முடியாது.

எனவே புதிய இயக்குநர்களுக்கு முன்னணி நடிகர்கள் வாய்ப்பு கொடுங்கள். புதுமுகங்களை அறிமுகப்படுத்தக்கூடாது என்று பிரபல டைரக்டர்கள் நினைத்திருந்தால் இந்த பாக்யராஜ் ஏது?

புது ஹீரோ படத்துக்கு ஏன் இசையமைக்க வேண்டும் என்று ஏ.ஆர். ரஹ்மான் நினைத்திருந்தால் 'சக்கரக்கட்டி'க்கு இசையமைத்திரக்க மாட்டார்" என ஒரு தாக்குதல் முழக்கமே நடத்திவிட்டார்.

தன் மகன் சாந்தனு பட கேசட் விழாவில் பாக்யராஜ் இப்படி பேசியது பலருக்கு திருப்தியையும் சிலருக்கு எரிச்சலையும் தந்துள்ளதாகத் தகவல்.

வெப்துனியாவைப் படிக்கவும்