திரையுல‌க‌த்‌தி‌ன் தே‌ர்த‌ல் கா‌ட்‌சிக‌ள்

ஞாயிறு, 13 ஜூலை 2008 (20:08 IST)
கலையுலக‌த்‌தி‌ற்கு‌ம் அர‌சியலு‌க்கு‌ம் அ‌ப்படி எ‌ன்னதா‌ன் தொட‌ர்போ. அர‌சிய‌லி‌ல் நட‌க்கு‌ம் அ‌த்தனை கா‌ட்‌சிகளு‌ம் கலையுலக‌த்‌தி‌ல் அ‌ப்படியே நட‌‌க்கிறது. தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்க‌த் தே‌ர்த‌ல் அத‌ற்கு ஒரு லே‌ட்ட‌ஸ்‌ட் உதாரண‌ம்.

தே‌ர்த‌லி‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்ற ராம.நாராயண‌ன் எ‌‌தி‌ர்‌த்து‌ப் போ‌ட்‌டி‌யி‌ட்ட ப‌ஞ்சு அருணாசல‌த்‌தி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌விழு‌ந்து ஆ‌சி‌ர்வாத‌ம் வா‌ங்‌கியு‌ள்ளா‌ர். ப‌ஞ்சுவு‌ம் அர‌சிய‌லி‌ல் ‌நிர‌ந்தர ந‌ண்பரு‌‌ம் இ‌ல்லை ‌நிர‌ந்தர எ‌தி‌ரியு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் தயா‌ரி‌ப்பாள‌ர் ச‌ங்க நடவடி‌க்கைகளு‌க்கு முழு ஒ‌த்துழை‌ப்பு தருவதாக உறு‌திய‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

ராம.நாராயண‌ன் தனது சகா‌க்களுட‌ன் முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தியையு‌ம் அமை‌ச்ச‌ர் ‌ஸ்டா‌லினையு‌ம் ச‌ந்‌தி‌த்து ஆ‌சி பெ‌ற்றா‌ர். அ‌ன்னை கருணா‌நி‌தி எ‌ன்ற அ‌றி‌க்கையு‌ம் த‌‌ந்தா‌ர். ‌திரையுல‌க‌த்‌தி‌ல் இது வழ‌க்கமான கா‌ட்‌சிதா‌ன் எ‌ன்றுதா‌ன் தே‌ற்‌றி‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்