ஷோபனா‌வி‌ன் நா‌ட்டிய‌ப்ப‌ள்‌ளி

ஞாயிறு, 13 ஜூலை 2008 (20:02 IST)
கலா‌ர்‌ப்பணா எ‌ன்ற பெய‌‌ரி‌ல் நடிகை ஷோபனா ஒரு நா‌ட்டிய‌ப் ப‌ள்‌ளியை‌க் க‌ட்டியு‌ள்ளா‌ர். க‌ட்டட‌ப் ப‌ணிக‌ள் பூ‌ர்‌த்‌தியாக இ‌ன்னு‌ம் ‌சில லகர‌ங்க‌ள் தேவை‌ப்படு‌வதா‌ல் நாடக‌ங்களை நட‌த்‌தி வரு‌கிறா‌ர்.

செ‌ன்னை ‌மியூ‌சி‌க் அகாட‌மி‌யி‌ல் வரும் 18 ஆ‌ம் தே‌‌தி நட‌க்க‌விரு‌க்கு‌ம் மாயா ராவண‌ன் நாடக‌க் கலெ‌க்ஷனு‌ம் க‌ட்டட ‌நி‌தி‌க்கு‌த்தானா‌ம். ஏ‌ற்கெனவே அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ளி‌ல் ‌திரை‌யிட‌ப்ப‌ட்ட மாயா ராவண‌ன் செ‌ன்னை‌க்கு வரு‌வது இதுவே முத‌ல்முறை.

தனது அ‌த்தைகளான ல‌லிதா, ப‌த்‌மி‌னி, ரா‌கி‌ணி மூவரு‌க்கு‌ம் நடன‌ப்ப‌ள்‌ளியை அ‌ர்‌ப்பண‌ம் செ‌ய்து‌ள்ள ஷோபனா‌வி‌ற்கு இ‌ப்போது பண‌ம்தா‌ன் முத‌ல் ‌பிர‌ச்சனை.

வெப்துனியாவைப் படிக்கவும்