'ப‌ந்த‌‌ய‌ம்' க‌ட்டு‌ம் ‌பிரகா‌ஷ் ரா‌ஜ்!

சனி, 12 ஜூலை 2008 (19:11 IST)
அ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌ம் யாராலு‌ம் அட‌க்க முடியாத ‌பிரகா‌ஷ் ரா‌ஜ் 'ப‌ந்தய‌ம்' பட‌த்‌தி‌ற்காக‌ப் ப‌ள்‌ளி‌க்கூட‌ப் பைய‌ன் போல ஹோ‌ம் ஒ‌ர்‌க் செ‌ய்‌கிறாரா‌ம். ஏ‌ன் எ‌ன்றா‌‌ல் கதை‌யி‌ன் மே‌ல் ஏ‌ற்ப‌ட்ட ஈ‌ர்‌ப்பா‌ம். கா‌ட்‌சிகளை முத‌ல் நாளே தெ‌ரி‌ந்துகொ‌ண்டு ‌வீ‌ட்டி‌ல் ஒ‌ர்‌க்அ‌வு‌ட் செ‌ய்துவ‌‌ந்து பட‌ப்‌பிடி‌ப்‌பி‌ல் அச‌த்‌தி வரு‌கிறாரா‌‌ம் மனுஷ‌ர்.

இ‌ப்பட‌த்‌தி‌‌ல் இவரு‌க்கு ம‌ந்‌தி‌ரி ‌வி‌ல்ல‌ன் வேடமா‌ம். அ‌ரிவா‌ள் கூ‌லி‌ங் ‌கிளா‌ஸ், லு‌ங்‌கி கெ‌ட்ட‌ப்‌பி‌ல் சூ‌ட்டி‌ங் ‌ஸ்பா‌ட்டையே அ‌திர வை‌க்‌கிறாரா‌ம்.

நி‌தி‌ன் ச‌த்யா ஹ‌ீரோவாக நடி‌க்கு‌ம் ப‌ந்தய‌த்‌தி‌ல் ரா‌திகா நடி‌த்து‌ள்ளா‌ர். டைர‌க்ட‌ர் எ‌ஸ்.ஏ.ச‌ந்‌திரசேக‌ர். ‌விஜ‌ய் ஆ‌‌ண்ட‌னி‌யி‌ன் இசையமை‌ப்‌பி‌ல் 5 பாட‌ல்க‌ள். ‌சி‌ந்து துலா‌னி‌யி‌‌ன் இளமை பொ‌ங்கு‌ம் ஆ‌ட்டபா‌‌ட்ட‌ங்களு‌க்கும் ப‌ஞ்ச‌மி‌ல்லை.

த‌‌ன்னுடைய வழ‌க்கமான பட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து மாறுப‌ட்டு காதலையு‌ம் ஆ‌க்ஷ‌ன் வேக‌த்தோடு கல‌ந்து சொ‌ல்லு‌ம் பட‌ம் எ‌ன்று இய‌க்குந‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். எ‌த்தனை அ‌ம்ச‌ங்க‌ள் இரு‌ந்தாலு‌ம், இ‌‌ந்த‌ப் பட‌த்‌தி‌ன் ஹ‌ீரோவாக‌ப் பேச‌ப்படுவது ‌பிரகா‌ஷ் ரா‌ஜ்தா‌‌‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்