அபிராமி ராமநாதன் தயாரிக்கும் 'பஞ்சாமிர்தம்'
வெள்ளி, 11 ஜூலை 2008 (18:02 IST)
நாசர் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடிக்கவிருக்கிறார். அபிராமி ராமநாதன்- நல்லம்மை தயாரிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தில் கதை, வசனம், நகைக்சுவை, பாடல்கள், இசை என ஐந்து விஷயங்களையும் முக்கியத்துவம் தந்து படத்தை தயாரிக்கப் போகிறாராம்.
'பஞ்சாமிர்தம்' என்ற தலைப்புக்கு ஏற்றவாறு படத்தில் இனிமையும், எளிமையும் இருக்குமாம். ராஜூ ஈஸ்வரன் இயக்க, பிரமோத் வர்மா ஒளிப்பதிவு செய்ய சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார்.
ஞாயிறன்று தொடங்கவிருக்கும் பஞ்சாமிர்தத்தின் படப்பிடிப்புக் காண விரும்பும் ரசிகர்கள் அதற்கான நுழைவுச் சீட்டை அபிராமி மகாலில் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாமிர்தம் படம் ஹிட்டானால் அதைத் தொடர்ந்து தயாரிப்பில் முழுவீச்சில் இறங்க முடிவெடுத்துள்ளாராம் அபிராமி ராமநாதன்.