சமீரா ரெட்டியின் கோலிவுட் பிரவேசம்!

வியாழன், 10 ஜூலை 2008 (20:42 IST)
கெளதம் மேனன் இயக்கும் 'வாரணம் ஆயிரம்' படத்தில் சமீரா ரெட்டி நடித்து வருவது தெரிந்ததே! வாரணம் ஆயிரம் படத்தில் கல்லூரிப் பெண்ணாக வரும் ரெட்டியின் நடிப்பை யூனிட்டே பார்த்து வியந்து போனதாம்.

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதுபோல் இயக்குநர் கெளதம் மேனனின் பாராட்டையும் தட்டிச் சென்றுள்ளாராம் அம்மணி.

அத்தோடு முடிந்துபோனதா கதை. வாரணம் ஆயிரத்துக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கப் போகும் படத்துக்கு சமீராதான் ஹீரோயின் என்பதுதான் லேட்டஸ்ட் ஹாட் நியூஸ்.

அந்தப் படம் வெளிவந்து, நன்றாக ஓடி, தனக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பதே சமீராவின் ஒரே நினைப்பு.

காலமும், களமும் அமைந்து தன் நினைப்பு பிழைப்பைக் கெடுக்காமல் இருந்தால் கோடம்பாக்கம் ஏரியாவில் சில பல லட்சங்களைப் போட்டு ஒரு குடிசையை வாங்கிப்போட்டு உட்கார்ந்து விடலாம் என்பதுதான் சமீரா ரெட்டியின் கனவாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்