16 மணி நேரம் படமாக்கப்பட்ட முதலிரவுக் காட்சி!

வியாழன், 10 ஜூலை 2008 (20:17 IST)
எதிலுமே ஒரு பர்ப‌க்சனை எதிர்பார்ப்பவர்கள் நம் இயக்குநர்கள். தான் நினைக்குற விஷயம் கிடைக்கிற வரை திருப்தியடைவதில்லை. ஒரு சண்டைக் காட்சியாகட்டும், பாடல் காட்சியாகட்டும் டேக் மேல் டேக்காக எடுத்து தனக்கு ஓகே ஆன பிறகுதான் விடுவார்கள்.

டைரக்டர் ஹரி மட்டும் இதற்கு விதிவிலக்கானவரா என்ன? இவர் இயக்கிவரும் 'சேவல்' படத்துக்காக ஒரு முதலிரவுக் காட்சியை 16 மணி நேரம் எடுத்து படமாக்கியுள்ளார்.

படத்தில் பரத் - பூனம் பாஜ்வா ஜோடி. இரண்டாவது ஜோடியான சிம்ரனுக்கும் பிரேமுக்கும் எடுக்கப்பட்ட முதலிவுக் காட்சிதான் 16 மணி நேரம் பிடித்துள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கிய ¥ட்டிங் மறுநாள் அதிகாலை 2 மணிக்குதான் முடிவடைந்திருக்கிறது.

புதுப்பட்டுப் புடவை அணிந்து, மல்லிகைப்பூ சூடி மணப்பெண் கோலத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த சிம்ரனை காண ரசிகர்கள் கூட்டம் வேறு அலைமோதியதாம்.

மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்குமா என்ன?

வெப்துனியாவைப் படிக்கவும்