ஷாஃபி இயக்கத்தில் பாவனா!

வியாழன், 10 ஜூலை 2008 (20:15 IST)
பாவனாவிற்கு மலையாள திரையுலகம் பட்டுககம்பளம் விரித்துள்ளது. இயக்குநர் ஷாஃபியின் இயக்கத்தில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார்.

தமிழில் 'ஜெயம் கொண்டான்' முடித்த கையோடு 'ஹீரோ' படப்பிடிப்பில் இருந்த பாவனாவிற்கு இந்த மலையாள வாய்ப்பினால் ஏகப்பட்ட மகிழ்ச்சி.

'ஹீரோ' படத்தில் நிதினுடன் ஜோடி போட்டு தெலுங்கு ரசிகர்கள் கண்களில் கனவுகளை விதைத்த பாவனாவுக்கு கேரளத்து ரசிக தரப்பையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கப் போகிறார்.

சதா, ஸ்ரேயா, அசின் போலவே தமிழா, தெலுங்கா, மலையாளமா எங்கு நிற்பது, எங்கு நிலைப்பது என்ற குழப்பத்தில்தான் பாவனாவும் இருக்கிறார்.

'பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்