மர்மயோகியில் அமிதாப்!

வியாழன், 10 ஜூலை 2008 (20:12 IST)
கமல் தனது படங்களில் சக நடிகர்கள், தான் மதிக்கும் நடிகர்களை நடிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன், காக்கா ராதாகிருஷ்ணன், நாகேஷ், வரலட்சுமி முதலானவர்களை தனது படத்தில் நடிக்க வைத்து தலைமுறை தாண்டிய கலைஞர்களுக்கு மரியாதை செய்து வருபவர்.

இப்போது தான் இயக்கி, நடிக்கவிருக்கும் மர்மயோகியிலும் ஒரு முக்கிய வேடத்தில் ஹேமமாலினியை நடிக்க வைக்கிறார். இதுதவிர, இன்னொரு ரோலில் நடிக்க அமிதாப் பச்சனை நாடியுள்ளார். கமலின் அழைப்பைப் பற்றி யோசித்து சொல்வதாக பச்சன் தரப்பு பதில் சொல்லியிருக்கிறது.

ஏற்கனவே ரஜினியின் சிவாஜியில் நடிக்க மறுத்த அமிதாப், மர்மயோகிக்கு ஒப்புதல் தருவாரா என்பதுதான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.

மர்மயோகியின் கதை விவரங்கள் தெரியவந்தால் தனது கேரக்டர் பொருத்தமாக அமையுமென்று நம்பினால் அமிதாப் நிச்சயம் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றே பேச்சு அடிபடுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்