ஸ்ரேயாவுக்கு கல்தா!

புதன், 9 ஜூலை 2008 (20:05 IST)
முன்னணி நடிகர்களின் படம் ஆரம்பிக்கப்படும் போதெல்லாம் முக்கியமான ஒரு கேள்வியாகக் கிளம்புவது யார் ஜோடி? என்பதுதான்.

அந்த வகையில் 'மர்மயோ‌‌கி'யில் கமல்ஹாசனுடன் ஜோடி போடப் போகிறவர் ஸ்ரேயா என்ற செய்தி ரசிகர்களின் காதில் தேன் பாய்ச்சியது. ஆனால், கடைசியாக நமக்கு கிடைத்த தகவலின்படி ஸ்ரேயா நாயகி ரோலில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளாராம்.

அப்படியானால் கமலின் ஜோடியாகும் வாய்ப்பு யாருக்கு என்ற அனுமானங்கள் ஒருபுறம் இருக்க, தமிழ் தெலுங்கு இந்திப் படங்களில் பிஸியாக இருப்பதால்தான் தன்னால் கமலுடன் நடிக்க முடியவில்லை என்று ஸ்ரேயா திருவாய் மலர்ந்துள்ளார்.

எது எப்படியோ, கமலின் முத்தத்திலிருந்து ஸ்ரேயா தற்காலிகமாக தப்பித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விஷயம்தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்