புரட்சித் தமிழனா? புகழ்ச்சித் தமிழனா?

புதன், 9 ஜூலை 2008 (20:02 IST)
"பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களம் இருக்கிறார்கள்" இந்த வசனத்தையே கொஞ்சம் மாற்றி மற்றவர்களை புகழ்ந்து பேசியே பெயர் வாங்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதில் முதலிடம் பெறுபவர் சத்யராஜ்தான்.

மனுஷர் என்னமா புகழ்ந்து தள்ளுகிறார். பெரியார் திடலில் வீரமணியை ஆகட்டும், பிறந்தநாள் விழாவின்போது நடிகர் விஜயை ஆகட்டும், யார்? என்ன? என்றெல்லாம் பார்க்காமல் வாயாரப் பாடி மனதாரப் புகழ்வதில் இந்த புரட்சித் தமிழனுக்கு இணையாக இப்போதைக்கு ஒருவருமில்லை.

சமீபத்தில் வெளிவந்துள்ள 'உளியின் ஓசை' படத்துக்கு உச்சாணிக் கொம்பில் நின்று அவர் பாடியுள்ள புகழ்ச்சி லாவணி கொஞ்சம் அல்ல, நிறையவே ஓவர்.

இப்படியே புகழ்ச்சி கீதம் பாடிக்கொண்டே போனால் புரட்சித் தமிழன் பட்டத்தை தொலைத்துவிட்டு புகழ்ச்சித் தமிழன் பட்டம் பெறுவது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்