டான்சர், ஸாரி எனக்கு கல்யாணமாயிடிச்சு, இங்கிலீஷ்காரன், காதல் எஃப்.எம்., குருஷேத்ரம், பவர் ஆஃப் உமன் எனும் தலைப்புகள் கொண்ட படங்களுக்கும் தமிழக அரசு மானியம் வழங்கியுள்ளதே, இது என்ன கொடுமை என தமிழ் ஆர்வலர்கள் கொதித்தெழ வேண்டாம். தமிழில்தான் தலைப்பு பெயரிட வேண்டும் என்ற அரசாணைக்கு முன்பே வெளிவந்தவை மேற்காண்பவை.
எனவே தமிழக அரசு விதிமுறைகளை தளர்த்தியதால் தப்பித்து பிழைத்துள்ள மேற்படி படங்கள், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட எழுபது தமிழ்ப் படங்களுக்கு மானியம் வழங்கியுள்ள அரசு இனி தமிழில் தலைப்புள்ள படங்கள் மட்டுமே தகுதியானவை, இதுவே கடைசி என்று கறாராகவும் சொல்லியுள்ளது.
கஸ்தூரிமான், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, கணபதி வந்தாச்சு, படப்பட்டியலுடன் வெளிவந்துள்ள எல்லா படங்களும் தலா ஏழு லட்சங்களை மானியமாக பெற்றுள்ளன. ஒரு சில இயக்குநர், நடிகர்களை கோடிட்டு காட்டி இது அரசியல் ரீதியான சலுகை என்ற முனுமுனுப்புகளும் இல்லாமல் இல்லை.