கோபிகா தான் இப்போது நடித்துவரும் 2 மலையாளப் படங்களையும் அவசர அவசரமாக முடித்துக்கொடுக்க ஆர்வம் காட்டுகிறார். காரணம் அம்மணிக்கு வருகிற 17 ஆம் தேதி அயர்லாந்து டாக்டர் மாப்பிள்ளை அஜிலேஷுடன் டும் டும்.
மலையாள நடிகர் சங்கம் தயாரிக்கும் டுவண்டி டுவண்டியில் மம்முட்டியோடு ஜோடி போட்டுள்ள கோபிகா, திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போவதில்லையாம்.
தான் முதன் முதலில் நடித்த 'ஃபார் த பீப்பிள்' முதல் கடைசியாக நடிக்கிற 'வெறுதே ஒரு பாரியா அல்ல' வரை திரையுலகம் தனக்கு பலவித அனுபவங்களைக் கற்றுத் தந்துள்ளதாக திருவாய் மலர்ந்துள்ள அம்மணி, "நான் திரையுலகை விட்டு விலகுவது முன்பே எடுத்த முடிவு. இருந்தாலும் ரசிகர்கள் என்னை எப்போதும் மறக்கமாட்டார்கள். தொடர்ந்து அன்பு காட்டுவார்கள்" என்று சிலாகித்து சொல்லியிருக்கிறார்.
நடிகைகள் கல்யாணம் ஆகிச் செல்வது என்பது தாங்கிக்கொள்ளக் கூடிய விஷயமா? ரசிகர்களுக்கு!