ஃபிலிம்ஃபேர் விழா!

செவ்வாய், 8 ஜூலை 2008 (19:41 IST)
55வது ஃபிலிம்ஃபேர் விழா வருகிற 12 ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த சினிமா நட்சத்திரத்துக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதற்கான முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், விருதுப் பட்டியலில் சிறந்த நடிகராக ரஜினியும், சிறந்த நடிகையாக நயன்தாராவும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

இதுபோன்று விஜய், அஜீத், சத்யராஜ், ப்ரியாமணி, தமன்னா, ஜோதிகா, அர்ச்சனா ஆகியோரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் என்கிற தகவல்கள் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளன.

வருகிற 12 ஆம் தேதி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அசத்திட நேரு ஸ்டேடியமும், தமிழ்த் திரை நட்சத்திரங்களும் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்