பார்ட்டியும் பட வாய்ப்பும்!

திங்கள், 7 ஜூலை 2008 (19:57 IST)
ஒன்றிரண்டு படங்களிலநடித்துவிட்டு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், வீட்டில் சும்மா உட்கார்‌‌ந்திருக்கமாட்டார் லட்சுமிராய். ஏதாவது ஒன்று செய்து கொண்டிருப்பார். நடிகர், தயாரிப்பாளர்களுக்கு நட்பு முறையில் 'பார்ட்டி' கொடுப்பது, வாய்ப்பு கேட்பது என்றிருப்பார்.

அதிலும், சென்னையில் கிரிக்கெட் நடந்தால் அதிலும் தோனி விளையாண்டால் முதல் ஆளாக ஆஜராகிவிடுவார். காரணம் கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அப்படி 'பார்ட்டி' கொடுத்ததன் பயனாக தற்போது இந்திப்பட வாய்ப்புகள் குவிந்துள்ளன. 'தசாவதாரம்' படத்தின் இசையமைப்பாளர் ஷிமேஷ் ரேஷ்மையா, அவரின் ஜோடியாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் மேலும் சில இந்திப்பட வாய்ப்புகளும் வந்துள்ளது என்று பெருமையுடன் சொல்லி வருகிறார்.

ஸ்டுடியோ 18 என்ற பட நிறுவனம் தயாரிக்கும் 'ஷேகுஜு' எனும் இப்படத்தை சதீஷ் கெளசிக் இயக்க உள்ளார். தமிழில் ஜீவா இயக்கிய 'தாம்தூம்' படம் வெளிவந்தால் தனக்கு மேலும் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவியும் என்றார். லட்சுமிராய் எந்த மொழியிலேயும் போய் நடியுங்கள். ஆனால், வளர்த்துவிட்ட தமிழ் பட உலகை மறந்துவிடாதீர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்