அறிமுக கூட்டமும் அதிரடி பேச்சும்!

சனி, 5 ஜூலை 2008 (20:20 IST)
நாளை தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல். உச்சகட்ட ஆள் பிடிப்புக்கு நடுவே ஆரவாரமாக நடந்தது முற்போக்கு அணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம்.

ஆரம்பமே அதிரடி! தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்வது தாக்கரேயின் மொழி வெறியை போன்றதே என எதிரணியை போட்டுத் தாக்கினார் சரத்குமார்.

சினிமாவில் ஜாதி, மதம், இனம், மொழி பார்க்கக் கூடாது என்றனர் பேசிய அனைவரும். கேயார் மட்டும் கூடுதலாக, ராம. நாராயணன் அணி மீது மிரட்டல் புகார் தெரிவித்தார். தங்களுக்கு சாதகமாக ஓட்டு போடாவிட்டால் வரிவிலக்கு தரமாட்டோம் என ராம. நாராயணனின் முன்னேற்ற அணியினர் தயாரிப்பாளர்களை மிரட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

எமோஷனலாக நடந்த விழா. இந்தளவு சேதாரமில்லாமல் நடந்தே பெரிய விஷயம்!

வெப்துனியாவைப் படிக்கவும்