ஐம்பது படங்கள் நடித்த நடிகைகளுக்கே வேறொருவர்தான் டப்பிங் குரல் கொடுக்கிறார். இந்நிலையில் முதல் படத்தில் ஒரு மலையாள நடிகை தமிழ் பேசி நடித்தால் கைதட்டி வரவேற்பதுதானே முறை?
அவர், மீராநந்தன். வால்மீகி படத்தின் நாயகி. ப்ளே ஸ்கூல் நடத்தும் டீச்சராக வால்மீகியில் நடிக்கிறார் மீராநந்தன். வடசென்னையில் நடக்கும் கதை என்பதால் கலப்படமில்லாத சென்னை பாஷை படம் முழுக்க புழங்குகிறது.
கல்லூரி அகில், வால்மீகியின் நாயகன். திண்டுக்கல் வாசியான இவர் சிரமப்பட்டு சென்னை பாஷை கற்று, டப்பிங் பேசினார். அகில் தமிழர், அவரை விட்டுவிடுவோம். மீராநந்தன் மலையாளி. நல்ல தமிழே தகராறு. இதில் சென்னை தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார்.
மீராநந்தனுக்கு நல்ல குரல் வளம். நடிக்க வரும்முன் மலையாளம் மட்டுமின்றி, தமிழ் பக்தி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். அந்தக் குயில் குரலை தவறிவட வேண்டாமே என்று படத்தின் இயக்குனர் உற்சாகப்படுத்தி மீரா நந்தனை பேச வைத்துள்ளார்.