சினிமா சதுரங்கத்தில் எந்த காய் எப்போது வெட்டப்படும் என்பது தெரியாது. ஆட்டம் தொடங்கும் முன்பே சில வேளை காய்கள் வெட்டப்படுவதுதான் சோகம்.
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் வாடா படத்திற்கு தினா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். ஆர்மோனியப் பெட்டியில் தினா கைவைக்கும் முன்பே ஆளை மாற்றியிருக்கிறார்கள். இப்போது இசையமைப்பவர் டி. இமான்.
சந்தர் சி ஜோடியாக நடிக்க ப்ரியாமணியிடம் கால்ஷீட் கேட்டனர். இளம் ஹீரோக்களை டார்கெட்டாக கொண்டு செயல்படும் ப்ரியாமணிக்கு இந்த வாய்ப்பு கசப்பு மருந்து. கால்ஷீட் நஹி என அவர் கதவு சாத்த, கீதா மிஸ்ரா என்ற இந்தி நடிகையை இறக்குமதி செய்துள்ளனர்.
மிஸ்ராவின் அழகான வாயில் தமிழ் நுழையவில்லையாம். இதனால் சந்தர தமிழுக்கு ஆள் வைத்து டியூஷன் நடத்தயிருக்கிறார்களாம்!