சந்தை படத்தை உதயபானு மகேஷ்வரன் இயக்குகிறார். நாளை, சக்கரவியூகம் படங்களின் இயக்குனர் இவர். சந்தையில் பசுபதி ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பாடலாசிரியர் சினேகனின் புத்தகம் மற்றும் பெண்கள் இன்னும் அழகாய் இருக்கிறார்கள் கவிதை தொகுதிகளில் மனதை பறிகொடுத்த உதயபானு மகேஷ்வரன், சந்தையில் இடம்பெறும் பாடல்களுக்கு இந்த இரு கவிதை தொகுதிகளில் இருந்தே வரிகளை எடுக்க உள்ளாராம். அதாவது சிச்சுவேஷனுக்கு ஏற்ற கவிதை பாடலாக்கப்படும்.
அலைபாயுதே படத்தில் வைரமுத்துவின் கவிதை தொகுதியில் இடம்பெற்ற எவனோ ஒருவன் வாசிக்கிறான் கவிதையை பயன்படுத்தினார் மணிரத்னம். ஆனால் முழு படத்துக்கும் ஒரு கவிஞனின் கவிதைகளை பயன்படுத்துவது இது முதல் முறையாம்.