மகாமக குளத்தில் திருவண்ணாமலை!

வியாழன், 3 ஜூலை 2008 (20:49 IST)
கும்பகோணம் மகாமகம் என்றால் குளத்தில் நெரிச்சலில் சிக்கி இறந்த அப்பாவிகளின் நினைவு வரும். திருவண்ணாமலை படம் வெளிவந்தால் அர்ஜுன், சுஜா போட்ட குத்தாட்டமும் நினைவுக்கு வரலாம்!

பேரரசு கவிதாலயாவுக்காக இயக்கும் திருவண்ணாமலையின் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில் நடந்து வருகிறது. சென்ற வாரம் கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்தார் பேரரசு.

ஸ்ரீகாந்த் தேவாவின் அக்மார்க் குத்துப் பாடல். அர்ஜுனுடன் இந்தப் பாடலில் ஆடியவர் சுஜா. பாடலை எழுதியவர்... வேறு யாராக இருக்க முடியும், பேரரசுவேதான்!

திருவண்ணாமலை முடிந்ததும் பரத் நடிக்கும் திருத்தணியை இயக்க்கும் பேரரசு, கிடைக்கிற கேப்பில் விஜய்க்கும் கதை பண்ணுகிறார். சம்மா இல்லை, இளைய தளபதியே சேர்ந்து படம் பண்ணலாம் என பேரரசுவிடம் கூறியிருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்