பயணத்தை தொடங்கினார் பூஜா!

புதன், 2 ஜூலை 2008 (20:27 IST)
நான் கடவுளோடு நின்றுபோன தனது தமிழ்த் திரையுலகப் பயணத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார் பூஜா.

அஞ்சலிகா சிங்களப் படத்தில் நடித்தது முதல் அடியோடு மாறிப் போனார் பூஜா. அட்வான்ஸ் என வரும் தயாரிப்பாளர்களுக்கு கதவடைப்புதான் பதிலாக கிடைத்தது. தொடர்ந்து சிங்களப் படங்களில் கவனம் செலுத்தியவர், ஒரு கட்டத்தில் தமிழ்த் திரையுலகிலிருந்தே மறைந்து போனார்.

அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தவர் பாலா. பல்வேறு நடிகைகள் நடித்து வெளியேறிய நான் கடவுளில் பூஜா பெர்ஃபெக்டாக செட்டானார். ஆனாலும், தொடர்ந்து அவர் தமிழ்ப் படங்களில் நடிப்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்தக் கேள்விக்குறி இப்போது ஆச்சரியக்குறி ஆகியுள்ளது. ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் ராஜாதிராஜாவில் ஆறு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம் பூஜா. இது சந்தியா நடிக்க ஒப்புக்கொண்டு கடைசி நிமிடத்தில் விலகிய வேடமாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்