எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் அந்தக் காலத்தில் தமிழகத்தை புரட்டிப்போட்ட திரைப்படம். இப்போதும் எந்ததனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என சப்பு கொட்டுகிறவர்கள் தெருவுக்கு மூன்று பேராவது இருப்பர்.
அப்படிப்பட்ட திரைப்படத்தின் ரீ-மேக்கில் நடிக்க வேண்டும் என்பது சுந்தர் சி-யின் ஆசை. ஆசைபட்டதோடு நிற்காமல் அதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம்.
எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தினாலே, அவர்களுக்கு எதிராக கூட்டம் போட்டு தீர்மானம் போடுகிறவர்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், ஸாரி, பக்தர்கள். அவர்களைப் பொறுத்தவரை உலகம் சுற்றும் வாலிபன் வாத்தியாரின் பொக்கிஷம். அதனை காப்பி அடிக்கவோ, திருப்பி எடுக்கவோ அனுமதிக்க மாட்டார்கள்.
என்ன செய்யப் போகிறார் சுந்தர் சி என்பதே அவரை சுற்றியுள்ளவர்களின் கேள்வி.