தனது உதவியாளர் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக வந்த தகவலை மறுத்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.
இந்தி கஜினி தொடங்கியபோது, சூர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்குவதாக அறிவித்தார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினி படப்பிடிப்பின் நடுவில் சூர்யாவிடம் கதை சொல்லி அவரின் சம்மதத்தையும் பெற்றார்.
இந்நிலையில் முருகதாஸ் படம் தயாரிக்கவில்லை. அவரது உதவியாளரே படம் தயாரிக்கிறார். சூர்யா நடிக்கும் அந்தப் படத்தை முருகதாஸ் இயக்குகிறார் என செய்தி வெளியானது.
இதனை முருகதாஸ் மறுத்துள்ளார். கஜினி முடிந்ததும் சொந்தமாக பட நிறுவனம் தொடங்குகிறேன். அதன் முதல் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார் என்றார்.