மேக்கப் இல்லாத மும்தாஜ்!

புதன், 2 ஜூலை 2008 (18:19 IST)
பேக்கப்பாகும் நிலையில் மும்தாஜுக்கு மேக்கப் இல்லாத வேடம். கேட்க கிலியாக இருக்கும் இந்த சேதியை பத்திரிகையாளரிடம் கேஷுவலாக பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

இவர் தயாரித்து இயக்கும் ராஜாதிராஜா‌வில் லாரன்ஸ் ஹீரோ. ஆறு ஹீரோயின்கள். காம்னா, சமிக்சா, மும்தாஜ், மீனாட்சி என இதுவரை நான்கு பேர் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இதில் மும்தாஜுக்கு அவர் எடையைப் போலவே ரொம்ப வெயிட்டான வேடம். முக்கியமாக மேக்கப் இல்லாமல் நடிக்கிறார். மோனிஷா என் மோனலிசாவில் அறிமுகமானதிலிருந்து இதுவரை மேக்கப் இல்லாமல் முகத்தை வெளியில் காட்டியதில்லை மும்தாஜ்.

அந்த பயங்கர அனுபவத்தையும் ஷக்தி சிதம்பரம் தயவில் தமிழ் ரசிகர்கள் வெகுவிரைவில் பெறலாம்!

வெப்துனியாவைப் படிக்கவும்