மிஷ்கின் - தயாரிப்பாளர் மோதல்!

புதன், 2 ஜூலை 2008 (18:17 IST)
மிஷ்கினின் அஞ்சாதே படத்தை தயாரித்தவர் இ‌த்தேஷ் ஜெபக். இவருக்கும் மிஷ்கினுக்கும் படத்தின் வெற்றி விழாவை நடத்துவதில் மோதல்.

இத்தேஷ் ஜெபக்கின் நான் அவர் இல்லை நூறு நாட்கள் ஓடியது. அஞ்சாதேக்கு பிறகு தயாரித்த பாண்டியும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த மூன்று படங்களின் வெற்றி விழாவையும் ஒரே மேடையில் நடத்தலாம் என்பது இத்தேஷின் ஆசை. ஒரு தயாரிப்பாளராக இந்த மூன்று படங்களிலும் அவருக்கு பேதமில்லை.

ஆனால் மிஷ்கினின் எண்ணம் வேறு. அஞ்சாதேயின் அருகில் வைக்க தகுதியில்லாதவை நான் அவன் இல்லை, பாண்டி என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. மூன்று படங்களின் வெற்றி விழாவையும் ஒரே மேடையில் நடத்துவது அஞ்சாதேயை அவமானப்படுத்துவது போல.

அதனால் இத்தேஷை முந்திக்கொண்டு அஞ்சாதேயின் வெற்றி விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார் மிஷ்கின். இதையறிந்த இத்தேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிரச்சனை இப்போது சங்கத்தின் தேர்தலுக்காக காத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்